இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.

கிறிஸ்தவத்தில் அற்புதம் எப்படி நடக்கிறது?

கிறிஸ்தவத்தில் அற்புதம் எப்படி நடக்கிறது?

விசுவாசித்தால் அற்புதத்தைக் காண்பாய்! "இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்கு சொல்லவில்லையா என்றார்" யோவான்11:40. எபிரேயர் 11 அதிகாரத்தில் வேத வசனங்கள் அனைத்தும், இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசத்தை நம்மில் பெருக்க செய்கிறது. "ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடே எழுந்திருக்க பெற்றார்கள் " எபிரேயர் 11:35 இதற்கு லாசருவின் உயிர்தெழுதல் நமக்கு சாட்சியாக இருக்கிறது. "நம்முடைய பெலவீனங்களை, வியாதிகளை, பாவங்களை, சாபங்களை இயேசு கிறிஸ்து சிலுவையில் சுமந்து தீர்த்து விட்டார்! இனி நாம் சுமக்கத் தேவையில்லை." என்ற விசுவாசம் நமக்குள் இருக்க வேண்டும். மேலும் இயேசு கிறிஸ்துவின் வல்லமையை விசுவாசிக்க வேண்டும். அவரை இரட்சகராக, அற்புதம் செய்கிறவராக விசுவாசித்து, அற்புதத்தைப் பெற்றுக் கொள்வோம்!
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Follow by Email

ஊக்கம் தருபவர்கள்

Google+ Followers